திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு
பாதுகாப்புப் படையினரால் நக்சல் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபாண்டு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கரியாபாண்டு மாவட்டத்தில் சத்தீஸ்கர் - ஒடிசா எல்லையில் அமைந்துள்ள கந்தேஷ்வர் கிராமத்தில் இன்று (ஜன.3) பாதுகாப்புப் படையினர் நக்சல்களின் ஊடுருவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது, அங்குள்ள காட்டுக்குள் பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: யானைகளை சீண்டியதால் விபரீதம்! ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்!
அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் முடிந்த பின்பு அவர்கள் அங்கு சென்று பார்த்தப்போது நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் இருத்தரப்புக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.