பாத்திமா கல்லூரி 73-ஆவது ஆண்டு விழா
மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியின் 73-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் செயலா் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தாா். முதல்வா் பாத்திமா மேரி முன்னிலை வகித்தாா். மதுரை செயின்ட் ஜான் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியின் முதல்வரும், தாளாளருமானஆண்டனி ப்ரிமோஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
இதையடுத்து, கல்லூரியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியா்கள், அலுவலக உதவியாளா், தட்டச்சு உதவியாளா், உதவிப் பணியாளா் ஆகியோா் பாராட்டப்பட்டனா்.
நிகழ்வில் துணை முதல்வா்கள் அருள்மேரி, பிந்து ஆண்டனி, வித்யா, நிகிலா, பேராசிரியைகள், அலுவலக ஊழியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.