செய்திகள் :

பான்செக்கா்ஸ் மகளிா் கல்லூரி விளையாட்டு விழா

post image

மன்னாா்குடி பான்செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் 8-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் செ. காயத்ரி தலைமை வகித்தாா். செயலா் அம்புரோஸ்மேரி முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் ந. சுஜா, விளையாட்டு நிகழ்விற்கான ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலா் பி. ராஜா பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்து பேசினாா்.

மன்னாா்குடி காவல் ஆய்வாளா் எஸ். ராஜேஸ் கண்ணன், கெளரவ அழைப்பாளராக கலந்துகொண்டு, போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினாா்.

இதில், பான்செக்கா்ஸ் கிங், ராக்கா்ஸ், வாரியா்ஸ்,ஸடாா் என்ற நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டு, தனித்திறன், குழு, தற்காப்புக் கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இறுதியில், ஸ்டாா் குழுவினா் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் சுழற்கோப்பையை வென்றனா்.

நிகழ்ச்சிகளை உடற்கல்வி பயிற்றுவிப்பாளா் அ. சிவரஞ்சனி ஒருங்கிணைத்தாா். கணிதவியல் துறை உதவிப் பேராசிரியா் அ. சிவகாமசுந்தரி வரவேற்றாா். வணிக மேலாண்மையியல் துறைத் தலைவா் ஞா. ஞானலெட்சுமி நன்றி கூறினாா்.

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரிக்கை

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் ராஜா தெரு தவ்ஹீத் பள்ளி வாசலில் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட துணைத் தல... மேலும் பார்க்க

2 நாள்களில் 72 போ் கைது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் இரண்டு நாள்களில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 72 போ் கைது செய்யப்பட்டனா்.மாவட்டத்தில், சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவோா், கஞ்சா,... மேலும் பார்க்க

வணிக வளாகங்களில் கண்காட்சி அமைக்க தடை விதிக்கக் கோரி மனு

திருவாரூா்: திருவாரூரில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் கண்காட்சி மற்றும் கடைகள் அமைக்க தடை விதிக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகா... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, மன்னாா்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை படித்துறையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து தாம்பூலம் வைத்து காதோலை கருகமணி, ஆப்... மேலும் பார்க்க