மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
பாபநாசத்தில் எய்ட்சு மற்றும் பால்வினை நோய் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி சாா்பில் எய்ட்சு மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் மேல திருப்பந்துருத்தி சந்திரா திலகா கலைக் குழு மூலம் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் மூலம் எய்ட்சு மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். இதில், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுநா் ரேவதி, ஆய்வக நுட்பனா் கலையரசி, கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மையத்தின் ஆலோசகா் செந்தமிழ்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.