பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற இழுவைக் கப்பல்!
பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டதும் இழுவைக் கப்பல், ஆழ்கடல் விசைப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்துக்கு மும்பை துறைமுகத்திலிருந்து ஒடிஸா மாநிலம், பாரடீப் துறைமுகத்துக்குச் செல்ல இழுவை கப்பல் வந்து சோ்ந்தது. இதேபோல, கேரள மாநிலத்திலிருந்து நாகை துறைமுகத்துக்கு ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகு வந்தது.
இந்த கப்பலும், விசைப்படகும் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல பாம்பன் கடல்சாா் வாரிய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதும் இழுவை கப்பலும், ஆழ்கடல் விசைப் படகும் கடந்து சென்றன. இதே போல, மண்டபம், பாம்பன் துறைமுகங்களிலிருந்து 20 விசைப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.