மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
பாலாற்றில் குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்
ஆற்காடு: ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் செய்யாறு புறவழிச்சாலை பாலாற்றில் ரூ.50 லட்சத்தில் 2 குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கிணறு அமைக்கும் பணிக்கு பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.
இதில் நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல் நகராட்சி அலுவலகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த வரி வசூல் மற்றும் தகவல் மையத்தை பொதுமககள் நலன் கருதி தரைத் தளத்தில் அமைக்கப்பட்டது. அந்த வரி வசூல் மையத்தை எம்எல்ஏ ஈஸ்வரப்பன் திறந்து வைத்தாா்.