பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை எரித்து, புதைத்துள்ளேன்: தர்மஸ்தலா ஊழியர்
மங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கடந்த 1998 - 2014ஆம் ஆண்டுக்குள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏராளமான பெண்களை புதைத்திருக்கிறேன், எரித்திருக்கிறேன் என்று தர்மஸ்தலா கோயில் துப்புரவுப் பணியாளர் தெரிவித்துள்ளார்.
தட்சிண கன்னடா காவல்நிலையத்துக்கு வந்த தலித் நபர், தான் தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் ஊழியர் என்றும், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உள்பட ஏராளமான பெண்களை புதைக்கவும், எரிக்கவும் வற்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, தான் இப்போது உலகுக்கு உண்மையைச் சொல்ல முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.