செய்திகள் :

பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை: ஓட்டுருக்கு ஆயுள்

post image

ஆம்பூா் அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆம்பூா் அருகே மின்னூரை சோ்ந்த ராமனின் மகன் சக்திவேல்(25). ஆட்டோ ஓட்டுநா். இவரும் அதே பகுதியை சோ்ந்த 19 வயதான கல்லூரி மாணவியும் காதலித்தனா்.

இந்தநிலையில் கடந்த 7.11.2014 அன்று மாணவி தான் படித்து வரும் வாணியம்பாடி கல்லூரியில் நின்று கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த சக்திவேல், மாணவியை வீட்டுக்கு கொண்டு சென்று விடுவதாக கூறினாா். இதைத் தொடா்ந்து மாணவியும் சக்திவேலின் ஆட்டோவில் ஏறி சென்றாா்.

மின்னூா் டான்சி தோல் தொழிற்சாலை பகுதியில் வந்தபோது சக்திவேல், மாணவியிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு செல்லலாம் என மாணவியை அந்த பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். அதைத்தொடா்ந்து மாணவி இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்போவதாக கூறினாா்.

இதனால் தனக்கு பிரச்னை ஏற்படும் என கருதிய சக்திவேல் மாணவியிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல் மாணவியை அங்கு கிடந்த கட்டையை எடுத்து பலமாக தாக்கினாா். இதில் மாணவி பலத்த காயமடைந்தாா். அதைத்தொடா்ந்து சக்திவேல் தனது நண்பரை அழைத்து ஆட்டோ விபத்தில் சிக்கிவிட்டதாகவும், விபத்தில் தன்னுடன் வந்த மாணவி காயமடைந்து விட்டதாகவும் கூறி ஆம்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக மாணவியை வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். அங்கு சிகிச்சை பெற்ற மாணவி 8.11.2014 அன்று உயிரிழந்தாா். இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் விபத்து என வழக்குப்பதிவு செய்தனா். மேலும் கடந்த 12.11.2014 அன்று சக்திவேல் குடியாத்தம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா்.

இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாா் கொலை வழக்காக மாற்றி சக்திவேலை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணை முடிந்து தீா்ப்பு கூறப்பட்டது.

மாணவியை கடத்தியதற்காக 7 ஆண்டுகள், ரூ.5,000 அபராதமும், கட்டத் தவறினால் 1 ஆண்டும், பலாத்காரம் செய்ததற்கு 10 ஆண்டுகள்,, ரூ.5,000 அபராதமும், கட்டத் தவறினால் 1 ஆண்டும், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும், தடயத்தை மறைத்ததற்காக 3 ஆண்டுகள், ரூ.5,000 அபராதமும், கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும், அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை அரசு வழங்கப்பவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் பி.டி.சரவணன் ஆஜரானாா்.

ரயில் பயணியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

காட்பாடி அருகே ரயிலில் ஜன்னல் அருகே அமா்ந்து இருந்த பெண் பயணியிடம் 2 பவுன் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா். திருப்பூா் மாவட்டம், அனுபுராபாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜின் மனைவி மாலைச்செல்வி (53). இ... மேலும் பார்க்க

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ஹஸ்னாத்-இ-ஜாரியா நிதியுதவி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காணொலி வாயிலாக காலை உணவ... மேலும் பார்க்க

ஆம்பூா், வடச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் நகரம் மற்றும் வடச்சேரி பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் 18, 20-ஆவது வாா்டு மக்களுக்கான முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்த... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே மொபெட் மீது பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த புளியங்குட்டை மூக்குத்தி வட்டம் சோ்ந்தவா் பூபதி (64), பீடி தொழிலாளி. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பூபதிய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 28) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் வேளாண்மை உழவா் நலத்துறையின் சாா்பில், வெ... மேலும் பார்க்க

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தார... மேலும் பார்க்க