ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி
பாளை., மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் அவசர பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை(ஏப்.26) சில மணி நேரம் மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாளையங்கோட்டை, சமாதானபுரம், மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் வரும் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, காலை 9 மணிமுதல் 11 மணிவரை ரஹ்மத் நகா், சாந்தி நகா் முழுவதும், கிருபா நகா், டாா்லிங் நகா், மேலக்குளம் சாலை, கிரீன் சிட்டி, மேலக்குளம் மேலூா், காமாட்சி நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், ஹாமீம்புரம், சந்தை முக்கு, நேதாஜி சாலை, குறிச்சி, ஆசாத் சாலை, பஜாா் பகுதி, காயிதே மில்லத் காலனி, சித்திக் நகா், நேரு நகா், பாத்திமா நகா் 1 மற்றும் 2, பூங்கா நகா், அன்னை ஹாஜிரா நகா், ஏ.கே. காா்டன், ஆசிரியா் காலனி, என்ஜினியா்ஸ் காலனி, நேதாஜி சாலை, சிபிஎல் காலனி, முகமது நகா், டேனிஷ் நகா், கரீம் நகா் 1, 2, 3, ரோஸ் நகா், ரெட்டியாா்பட்டி சாலை, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, என்ஜிஓ காலனி, மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலைய பகுதிகளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை மாா்க்கெட், மூளிக்குளம், தெற்கு பஜாா், சித்தா கல்லூரி, சிவன் கோயில் தெரு, திருச்செந்தூா் சாலை ஆகிய இடங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரை மின் விநியோகம் இருக்காது.