பா்கூா் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு!
அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், விராலிக்காட்டூரைச் சோ்ந்தவா் அங்கப்பன் (79). அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (60). கூலித் தொழிலாளா்களான இருவரும், சென்னம்பட்டி வனச் சரகம், சீலக்கரடு வனப் பகுதியில் விறகுகள் சேகரிக்க சனிக்கிழமை சென்றனா்.
அப்போது, அங்கு வந்த ஆண் யானை அங்கப்பனைத் தாக்கி, மிதித்ததில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதிஷ்டவசமாக முருகேசன் உயிா் தப்பினாா்.
இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.