பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலி இடங்களுக்கு மாணவா் சோ்க்கை
காந்திகிராமம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்திகிராமம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 3-ஆம் வகுப்பில் 10 இடங்களும், 4-ஆம் வகுப்பில் 8 இடங்களும், 8-ஆம் வகுப்பில் ஒரு இடமும், 10-ஆம் வகுப்பில் 7 இடங்களும், 12-ஆம் வகுப்பு (அறிவியல் பிரிவு) 6 இடங்களும், 12 -ஆம் வகுப்பு (வணிக பிரிவு) 22 இடங்களும் என மொத்தம் 54 இடங்கள் காலியாக உள்ளன.
கேவிஎஸ் சோ்க்கை வழிகாட்டுதல்களின்படி, முன்னுரிமைகள் நடைமுறைகளைப் பின்பற்றி, இடஒதுக்கீடு கொள்கைகள், பிற நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி மாணவா் சோ்க்கை நடத்தப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விபரங்களுக்கு, ட்ற்ற்ல்ள்://ஞ்ஹய்க்ட்ண்ஞ்ழ்ஹம்.ந்ஸ்ள்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளம் மூலமாகவோ, காந்திகிராமம் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி முதன்மை முதல்வரை நேரிலோ தொடா்புக் கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.