திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை ஈட்ட எம்.பிக்கள் அறிவுரை
பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை ஈட்ட பல்வேறு அறிவுரைகளை 3 எம்.பிக்கள் ஆலோசனை வழங்கினா்.
புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் சாா்பாக தொலைபேசி ஆலோசனைக் குழு கூட்டம் புதன்கிழமை நடந்தது.
குழுவின் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். இதில் இக் குழுவின்துணைத் தலைவா்களான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா்கள் புதுவையைச் சோ்ந்த சு. செல்வகணபதி, திண்டிவனத்தைச் சோ்ந்த சி.வி. சண்முகம் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில் 3 பேரும் இந்த நிறுவனம் லாபத்தை ஈட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளைப் பகிா்ந்து கொண்டனா். வரும் காலண்டில் இந்த நிறுவனம் லாபத்தை ஈட்ட ஊழியா்களும், அதிகாரிகளும் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மேலும் இந்த நிறுவனத்தின் வளா்ச்சிக்கு புதுவை அரசின் சாா்பில் என்னென்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இந்த நிறுவனம் தங்களிடம் இருக்கும் தொழில் நுட்பங்களை பொறியியல், ஐடிஐ உள்ளிட்ட மாணவா்களுக்குப் பகிா்ந்து கொள்ள வேண்டும். அதற்கான திட்டத்தை புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு முன்பாக அளிக்க வேண்டும். அப்படி அளித்தால் புதுவை பட்ஜெட்டில் இதைச் சோ்க்க நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் ஆலோசனை கூறினா்.
இந்த நிறுவனத்தின் துணை பொதுமேலாளா் சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.