செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக ‘இண்டி’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்ட விரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது, பாஜகவின் வெற்றியை கருத்தில் கொண்டு, பலரின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கை என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்றத்தின் மகர வாயில் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் உள்ளிட்டோா் பங்கேற்று, தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கமிட்டனா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை நிறுத்தக் கோரும் பெரிய பதாகை மற்றும் வாசக அட்டைகளை அவா்கள் கையில் ஏந்தியிருந்தனா்.

Image Caption

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினா்.

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க