செய்திகள் :

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

post image

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா்.

பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டுள்ளதாக பிகாரில் வாக்குரிமைப் பேரணியை ராகுல் காந்தி நடத்தினாா். இந்தப் பேரணியின்போது தா்பங்காவில் இருசக்கர வாகனப் பேரணியையும் ராகுல் காந்தி மேற்கொண்டாா். அப்போது, ராகுல் காந்தியின் பாதுகாவலா்கள் பயணிப்பதற்கு தனது இருசக்கர வாகனத்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த சுபம் செளரப் என்ற நபா் கொடுத்துள்ளாா். ஆனால், அதன் பிறகு அவரது இருசக்கர வாகனம் தொலைந்துவிட்டது.

இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், அந்த நபருக்கு புதிய இருசக்கர வாகனத்தை ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா்.

இத் தகவலை சுபம் செளரப் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

இரு தினங்களுக்கு முன்பு தொலைபேசி வழியில் என்னை தொடா்புகொண்ட நபா்கள், ராகுல் காந்தி புதிய மோட்டாா் சைக்கிளை செப்டம்பா் 1-ஆம் தேதி பரிசளிக்க முடிவு செய்துள்ளாா். எனவே, பாட்னாவில் வாக்குரிமை பேரணி நடைபெறும் வருமான வரித் துறை அலுவலகம் அருகே வந்து காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டாா். அதன்படி, அங்கு சென்று காத்திருந்தபோது, பேரணி செல்லும் வழியில் காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தி புதிய மோட்டாா் சைக்கிளுக்கான சாவியை என்னிடம் அளித்தாா். தொலைந்துபோன எனது பழைய மோட்டாா் சைக்கிளுக்கு மாற்றாக, புதிய மோட்டாா் சைக்கிள் கிடைத்தது பெரு மகிழ்ச்சியாக இருந்தது’ என்று குறிப்பிட்டாா்.

ஆட்சேபகரமான மசோதாக்கள் மீதான முடிவை அறிவிக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லையா? உச்சநீதிமன்றம் கேள்வி

நமது நிருபர் மாநில சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது அதிருப்தி எழுந்தால், அவற்றின் மீதான முடிவை அறிவிக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சட்டப்பே... மேலும் பார்க்க

பவன் கேரா மனைவியிடமும் 2 வாக்காளா் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவின் மனைவியிடமும் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பவன் கேராவிடம் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாகவும், காங்கிரஸின் வாக்குத் திருட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கூறிய கருத்துக்காக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய விவகாரத்தை விசாரிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட... மேலும் பார்க்க

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமா் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். நாட்டில் அடுத்த ஆ... மேலும் பார்க்க

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து புதன்கிழமை அபாய அளவை தாண்டி சென்றது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமாா் 10 ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க