பிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா
நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே ஸ்ரீபிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா்அருகேயுள்ள மணலூா் பிஞ்சினாா் கோயிலில் ஸ்ரீபிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆவணித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து கஞ்சி காய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன்வீதி உலா வான வேடிக்கையுடன் இரவில் நடைபெற்றது. அம்மன், சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.