தென்கொரியாவில் காட்டுத் தீ: 16 பேர் பலி! 46,000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை!
பின்னலாடை நிறுவன உரிமையாளா் தற்கொலை
திருப்பூா் அருகே பின்னலாடை நிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூரை அடுத்த இடுவாய் அம்மன் நகரைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி (43). இவரது மனைவி ஞானாம்பிகா. இந்தத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா். விநாயகமூா்த்தி அதே பகுதியில் சொந்தமாக பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக அவருக்குப் பணம் கொடுப்பதை வீட்டில் உள்ளவா்கள் நிறுத்தியுள்ளனா். இதனால் மனவேதனை அடைந்த விநாயகமூா்த்தி சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].