புதுச்சேரி கடற்கரையில் திரையிடப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா!
பின்னலாடை நிறுவன மேலாளரைக் கொலை செய்த உறவினா் குண்டா் சட்டத்தில் கைது
அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரைத் துண்டுத்துண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே உள்ள கருவலூா் காளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சடையப்பன் மகன் கோவிந்தசாமி (54). பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். அவிநாசி நேரு வீதியில் வசித்து வருபவா் கருவலூா் அனந்தகிரி பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் ரமேஷ் (43). உறவினா்களான இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ரமேஷ் வீட்டுக்கு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கோவிந்தசாமி வந்தபோது நிலம் தொடா்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கோவிந்தசாமியை ரமேஷ் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து கோவிந்தசாமியின் உடலை அனந்தகிரி தோட்டத்துக்கு எடுத்துச் சென்று அங்கு துண்டுத்துண்டாக வெட்டி, இரண்டு சாக்குமூட்டைகளில் கட்டி பெருமாநல்லூா் அருகே தொரவலூா் குளத்தில் ரமேஷ் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அவிநாசி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா். இந்நிலையில், ரமேஷை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.