பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?
குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா குறித்து பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் (74) தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா்.
அவருக்கு இன்னும் சுமாா் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் மீதமுள்ள நிலையில், உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த முடிவை எடுத்ததாக தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ராஜிநாமா செய்துள்ள இவா், அண்மையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டதும், பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே திங்கள்கிழமை கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜகதீப் தன்கா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா குறித்து பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா செய்துள்ளார்.
அவர் ராஜிநாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?
பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.