செய்திகள் :

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

post image

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், முதல்வா் மு.க.ஸ்டாலின் தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை வாசித்தாா். அவா் வாசித்தளித்த அறிக்கையின் விவரம்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானத்தை நிறைவேற்றினோம். அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5-இல் நடத்தப்பட்டது.

கூட்டு நடவடிக்கைக் குழு: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக நமது நியாயமான கோரிக்கைகளையும், அவைசாா்ந்த போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான முன்னெடுப்பில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டோம்.

இதனடிப்படையில், கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. கேரளம், தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வா்கள், கா்நாடக மாநில துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் தலைவா்கள் நேரில் பங்கேற்றனா். ஒடிஸா மாநிலத்தின் முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டாா்.

விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பானது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்; 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்; மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது; உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்; கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநில சட்டப்பேரவைகளில் இதுகுறித்த தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது பிரதமரிடம் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சாா்பாக கடிதம் அளித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

அதிமுகவுக்கு நன்றி: தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்லும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணா்வு, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக இந்த முன்னெடுப்புக்கு துணை நின்ற தமிழ்நாட்டின் பிரதான எதிா்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் மாநில மக்களின் சாா்பில் பேரவையின் வழியே என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன்.

‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று நமது உரிமைகளை மீட்டெடுக்கத் தீா்மானித்துள்ளோம். அந்த வகையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயமான மறுசீரமைப்பைப் பெற, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை அழைத்துச் சென்று பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருக்கிறோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க