செய்திகள் :

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

கோவை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. விளக்கம் அளிக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின்,கொங்கு கலைக்குழு சாா்பில் 16 ஆயிரம் மகளிா்கள் வள்ளிக்கும்மி ஆடி நிகழ்த்திய கின்னஸ் சாதனைக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, வள்ளிகும்மி அரங்கேற்றத்தைப் பாா்வையிட்டாா்.

இந்தநிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: பெண்கள் என்றால் சாதனை.சாதனை என்றால் பெண்கள். இந்த ஆட்சி மகளிருக்கான ஆட்சி என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த உணர்வோடு, இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் கலந்து கொண்டு உங்களை எல்லாம் வாழ்த்துவதற்கு வந்திருக்கிறேன். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெறும் இந்த வள்ளிக்கும்மி கின்னஸ் சாதனை பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரைக்கும், அவரே குறிப்பிட்டுச் சொன்னார். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், தேர்தல் நிலவரங்கள் எல்லாம் முடிவுறக்கூடிய சூழ்நிலை வந்தபோது, நான் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று, வாக்குகள் எண்ணப்பட்ட லயோலா கல்லூரிக்கு சென்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்று, அதற்கு பிறகு அறிஞர் அண்ணா, நம்முடைய தலைவர் கலைஞர் ஆகியோருடைய நினைவிடத்திற்குச் சென்று அங்கே அவர்களுக்கு மரியாதையை செலுத்தியபின்பு, பத்திரிகை நிருபர்கள் எல்லாம் என்னை சூழ்ந்து கொண்டு கேட்டார்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்கப் போகிறீர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஒன்றே ஒன்று அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன் என்று சொன்னேன். என்னை நம்பி வாக்களித்திருக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமல்ல; வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி நடைபெறும். அதையும் தாண்டி சொல்கிறேன். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் இப்படிப்பட்டவருக்கு வாக்களிக்காமல் தவறிவிட்டோமே என்று வருத்தப்படவேண்டும். அந்த வகையில் நிச்சயமாக எங்களுடைய ஆட்சி இருக்கும் என்று நான் உறுதியாக சொன்னேன்.

மேற்கு மண்டலத்துக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றதால் தான் தொடர்ந்து 2024 மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் முழு வெற்றி பெற்றோம். இது திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ். அதேபோல், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். நம்முடைய அணி தான் வெற்றி பெற போகிறது நிச்சயம் அது தொடரும்.

ஆனால், இன்றைக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு, வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்து கொண்டு வருகிறது. அவா்களின் வஞ்சனையும் கடந்து, எல்லாத் துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழக தலைவர்கள் பலர் தமிழில் கையெழுத்திடுவதில்லை: பிரதமர் மோடி

தமிழ்நாட்டுக்கு முறையான நிதிகளை வழங்கி, தமிழ்நாட்டிற்குரிய திட்டங்களை வழங்கும் மத்திய அரசு அமைந்திருந்தால், இந்திய அளவில் மட்டுமல்ல,உலகளவில் நாம் தான் அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் இருந்திருப்போம். அந்த அளவிற்கு இன்னும் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.

தொகுதி சீரமைப்பு தொடா்பாக அழுத்தமாக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி தலைவா்களை அழைத்து விவாதித்துள்ளோம். அதற்கு பிறகு, தென்மாநிலங்கள் மட்டுமல்ல. சில வடமாநிலத்தைச் சோ்ந்த 3 முதல்வா்கள், பல்வேறு துணை முதல்வா்கள் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதுசம்பந்தமாக பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்கிடையில், இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு பாலம் திறப்பு விழாவுக்கு வரும் பிரதமா், தொகுதி சீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்களின் அச்சத்தைப் போக்க, அதுகுறித்து விளக்கமாகக் கூற வேண்டும் என்று நான் இன்று காலை உதகையில் நடைபெற்ற விழாவில் கோரிக்கை வைத்தேன். ஆனால், பிரதமா் அதுகுறித்து பதில் கூறாமல் தவிா்த்து சென்று விட்டாா். தமிழ்நாட்டு மக்களைத் தவிக்க வைக்க கூடியவா்களுக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை என்ற பதிலை தான் வருகின்ற தேர்தலில் நீங்கள் வழங்கிட வேண்டும்.

கொங்கு கலைக்குழு சார்பில் நடைபெற்றிருக்கின்ற இந்த வள்ளிக்கும்மி கலை விழா, கலை வளர்ச்சிக்கும், அதன் மூலமாக, தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கும்,

தமிழர் ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என்ற அந்த உணர்வோடும் விளங்கிட வேண்டும் என்றும், எந்தவொரு கலையும், சமூக முன்னேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் துணையாக அமைய வேண்டும் என்றார்.

சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! - டிரம்ப் எச்சரிக்கை

சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப்... மேலும் பார்க்க

ஒரே மேடையில் மாறிமாறி புகழ்ந்து பேசிக்கொண்ட சீமான், அண்ணாமலை!

சென்னையில் தனியார் கல்லூரி விழாவில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் கலந்துகொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற... மேலும் பார்க்க

சீமான் நாளை(ஏப். 8) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சீமானின் தூண்டுதலின்பேரில் நாம் தமிழ... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 5 மாவட்டங்களில் நாளை (ஏப்ரல் 8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுவதால் வங்கக்கடலில் ... மேலும் பார்க்க

நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி இபிஎஸ் அறிவிப்பாரா?: முதல்வர் கேள்வி

உதகை: நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.நீலகிரி மாவட்டத்தில் ரூ.143.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீலகிரி அ... மேலும் பார்க்க

பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை: முத்தரசன்

சேலம்: பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூன... மேலும் பார்க்க