செய்திகள் :

பிரதமர் வீடு கட்டும் திட்டம்: கட்டாத வீட்டுக்கு வாழ்த்து மடல்; தொழிலாளர் அதிர்ச்சி; நடந்தது என்ன?

post image

நீலகிரி மாவட்டம் பந்தலூர், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட இரும்பு பாலம் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர் பன்னீர்செல்வம் - மகேஷ்வரி தம்பதியர். கூலித் தொழிலாளர்களான இவர்களுக்குப் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டுவசதி திட்டம், டெல்லியிலிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், "பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் நீங்கள் புதிய வீட்டினைப் பெற்றமைக்கு வாழ்த்துகள். இந்த திட்டம் உங்களுக்குப் புதிய வீடு மட்டுமின்றி சுயமரியாதையும் சமூக முன்னேற்றத்தையும் வழங்கியிருக்கிறது.

கடிதம்

உங்கள் புதிய வீட்டினைத் தூய்மையாக வைத்திருப்பதோடு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பான குடிநீர், எரிபொருள் சிக்கனம், மரம் நடுதல் போன்றவற்றிலும் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தினர் வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என உள்ளாட்சி நிர்வாகிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

இது குறித்துத் தெரிவித்த தொழிலாளர் மகேஷ்வரி, "நிரந்தர வேலை இல்லாமல் 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு வாடகை வீட்டில் சிரமப்பட்டு வருகிறோம். மாமனார் வழங்கிய 4 சென்ட் நிலத்தில் வீடு கட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில், காட்டாத வீட்டைக் கட்டிக் கொடுத்ததாக வாழ்த்து அனுப்பியது எந்த விதத்தில் நியாயம். முறையான விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்" என்றார்.

மகேஷ்வரி

இது குறித்துத் தெரிவித்த நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள், "இவர்கள் வசிக்கும் வாடகை வீட்டின் முகவரி, தம்பதியர் பெயர் எல்லாமே சரியாக இருக்கின்றது. ஆனால், வீடு தான் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இவருக்குத் தெரியாமல் இவர்களின் பெயரில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா அல்லது அலுவல் அலட்சியப் பிழையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அனுமதி இல்லை; 'ஓயோ'-வின் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் இதுதான்!

இந்தியா முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் பல தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது பிரபல 'OYO' நிறுவனம்.திருமணமாகாதவர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லோருக்கும் அனுமதி வழங்கி வந்தது 'OYO'... மேலும் பார்க்க

GST: ரூ.40 லட்சம் வருமானம்... பானிபூரி விற்பவருக்கு வந்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்! - என்ன நடந்தது?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் ஒருவருக்கு ஜி.எஸ்.டி (GST) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பானிபூரி விற்றதின் மூலம் அந்தப் பானிபூரி விற்பனையாளரின் ஆண்டு ... மேலும் பார்க்க

M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், "சிந்துவெளி நா... மேலும் பார்க்க

'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' - தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. தேர்வு செய்யப... மேலும் பார்க்க

திருவாரூர்: தொடரும் விபத்து; பாதுகாப்பு குறைபாடு; அவசர கதியில் திறக்கப்பட்டதா தேசிய நெடுஞ்சாலை?!

நாகப்பட்டினம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் (NH83) ஒரு பகுதியான நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்து, அதற்காக 600 கோட... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத நியாய விலைகடை - பொது மக்கள் அவதி!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே அமைந்திருக்கிறது சொரக்காயல்நத்தம் பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளநாயக்கனேரி அருகே பழுதடைந்த கட்டடத்தில் நியாய விலைகடை இயங்கி வந்தது. இந்த நிலைய... மேலும் பார்க்க