பிரபல ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லின்ச் காலமானார்!
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லின்ச் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காலமானார். அவருக்கு வயது 78.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற திரைப்படங்களான புளூ வெல்வெட், முல்ஹோலண்ட் டிரைவ் மற்றும் தொலைக்காட்சி தொடரான டுவின் பீக்ஸ் ஆகியவற்றின் இயக்குநரான டேவிட் லின்ச் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இறந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் முகநூல் மூலம் தெரிவித்தனர்.
இவரின் டுவின் பீக் தொடர் மூன்று கோல்டன் குளோப்ஸ், 2 எம்மிகள் மற்றும் அதன் இசைக்காக ஒரு கிராமி விருதையும் வென்றது.
டேவிட் லின்ச் புளூ வெல்வெட் படத்திற்காக ஆஸ்கர் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் 2019 ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாடமி விருதைப் பெற்றார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவால் காலமான இயக்குநர் டேவிட் லின்ச்சின் மறைவுக்கு ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.