செய்திகள் :

பிரம்மாஸ்திர ஹோமம்: மூன்று வகை சத்ருக்கள், எதிர்ப்பு, எதிரிகளைக் கட்டுப்படுத்தும் பகளாமுகி வழிபாடு!

post image

பிரம்மாஸ்திர ஹோமம்: மூன்று வகை சத்ருக்கள், எதிர்ப்பு, எதிரிகளைக் கட்டுப்படுத்தும் பகளாமுகி வழிபாடு! வரும் 2025 மார்ச் 13-ம் நாள் வியாழக்கிழமை மாசி பௌர்ணமி நன்னாளில் காலை 8 மணி முதல் இங்கு பகளாமுகி பிரம்மாஸ்திர ஹோமம் நடைபெற உள்ளது.

பகளாமுகி பிரம்மாஸ்திர ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

பகளாமுகி பிரம்மாஸ்திர ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

'எதிரிகளை முடக்கும் தேவி' என்று புராணங்கள் சிறப்பித்துக் கூறும் தேவி பகளாமுகி. தசமகா வித்யா தேவியருள் இவள் எட்டாவது மகாசக்தி. ஸ்ரீலலிதாவின் முதன்மை படைத்தலைவியாக பகளாமுகி விளங்குகிறாள். இவளை வணங்கினால் சகல எதிர்ப்புகளும் அடங்கும் என்பது நம்பிக்கை. இவள் தோன்றியவிதமே அலாதியானது என்கிறது புராணம். கிருதயுக ஆரம்பத்திலேயே சமுத்திரம் பொங்கி மகாபிரளயம் ஏற்பட்டது. அப்போது பாற்கடலும் கொந்தளித்து, ஸ்ரீமன் நாராயணருக்கு அசௌகரியம் உண்டானது. அப்போது அவர் சிவபெருமானை வேண்ட, அவர் பகளாமுகியின் மூல மந்திரத்தை உபதேசம் செய்தார். திருமாலும் பகளாமுகியை ஆராதிக்க, செளராஷ்டிராவில் மஞ்சள் நிறத் திருக்குளத்தில் பிரஹ்மாஸ்திர ரூபிணியாக அவதாரம் செய்தாள். பிரளயத்தை நிறுத்தினாள். இதனால் தேவர்கள் இவளை ஸ்தம்பிணி (நிலை நிறுத்துபவள்) என்று போற்றினர்.

செய்வினையை திரும்ப எடுத்துச் செயலிழக்கச் செய்யும் முறைக்கு வலஹனம் என்பர். பகளாமுகி சூக்தம் என்னும் 12 ஸ்லோகங்களில் வல்கா என்னும் இவ்வித்தை தெரிகிறது. வல்கா என்றால் குதிரையின் கடிவாளம். இதுவே வல்காமுகி என்றாகி, பிறகு பகளாமுகி என்றானது. நம் வாழ்வில் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய உத்யோக சத்ரு (பணி செய்யும் போது கூடவே இருந்து இடையூறு செய்பவர்கள்) அந்தர் சத்ரு (நம் கண்களுக்குத் தெரியாமல் இடர் தருவோர்) பஹிர் சத்ரு (திடீரென உருவாகி நம்மை நிலைகுலையச் செய்பவர்கள்) மூவகை சத்ருக்களையும் பிரம்மாஸ்திரம் போல கட்டி நம்மைக் காப்பவள் பகளாமுகி.

ஒரு கரத்தால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கரத்தால் கதாயுதமும் ஏந்திய துடியான தேவி இவள். அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஈசன் அருளிய ப்ரஹ்மாஸ்த்திரம் பகளாமுகி மூல மந்திரம் சத்ருக்களை அழிக்க வல்லது. பீதாம்பரி, பிரம்மஸ்திர ரூபிணி என்றெல்லாம் போற்றப்படும் இவள், மஞ்சள் வஸ்திரம் உடுத்தி, இளம்பிறை சூடி அருள்வாள். தீய சக்திகளை அடக்க பராசக்தி புறப்பட்டபோது முன்படையின் சேனாதிபதியாக விளங்கியவள் இவள். மேலும் தேவாதிதேவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் போன்ற கொடுமைகளை இழைத்தனர் அசுரர்கள். அப்போது அவர்கள் வைத்த சூனியங்களை திரும்ப எடுத்தவள் பகளாமுகி. பெரும்பாலும் வடநாட்டில் மட்டுமே வழிபடப்பட்டு வந்த இந்த தெய்வம் தற்போது சென்னைக்கு அருகிலும் அருளாட்சி செய்ய வந்துவிட்டாள்.

பகளாமுகி பிரம்மாஸ்திர ஹோமம்

சென்னை வல்லக்கோட்டையிலிருந்து எறையூர் போகும் வழியில் அமைந்திருக்கிறது பகளாதேவி த்யான பீடம். இங்கே அமைதியாக அமைந்துள்ள ஸ்ரீபிருந்தாவனத்தினுள் பகளாமுகி அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். 2006-ல் சோமநாதசிவாச்சார்யார் என்ற மாபெரும் ஞானியின் கனவில் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்பி பக்தர்கள் குறைகள் போக்கி மங்கல வாழ்வுக்கு மந்திர உபதேசம் செய்யப் பணித்தாள் பகளாமுகி. அன்றிலிருந்து இன்றுவரை தன்னை வணங்கும் பக்தர்களின் எதிர்ப்புகளை நீக்கி வரமருள்கிறாள் பகளாமுகி. 2017-ல் வேத விமானக் கருவறையில் சிம்ம பீடத்தில் மூலஸ்தானத்தில் பகளாமுகி பிரதிட்டை செய்யப்பட்டாள். கருவறைக்கு எதிர்புறத்தில் காப்பு கணபதியாக ஹரித்ரா கணபதி வீற்றிக்க, மகா மண்டபத்தில் பாலாம்பிகா உடனுறை அமிர்த மிருத்யுஞ்சயர் அருள்கிறார்.

சாந்நித்யமும் பெரும் அதிர்வுகளும் கொண்ட இந்த ஆலயத்தில் துடியான தேவியாக பகளாமுகி விளங்குகிறாள். இவள் விருப்பத்துக்குரிய பிரம்மாஸ்திர ஹோமத்தை செய்து அல்லது கலந்துகொண்டு வேண்டினால் சகல துக்கங்களையும் இவள் தீர்க்கக்கூடியவள் என்கிறது புராணம். வரும் 2025 மார்ச் 13-ம் நாள் வியாழக்கிழமை மாசி பௌர்ணமி நன்னாளில் காலை 8 மணி முதல் இங்கு பிரம்மாஸ்திர ஹோமம் நடைபெற உள்ளது. இந்த யாகம் குழப்பங்களை அகற்றி தெளிவான புத்தியையும், நாம் சந்திக்கும் எதிர்ப்புகளை, எதிரிகளை விலக்கி அமைதியான வாழ்வையும், வழக்குகளில் வெற்றியும், பில்லி சூன்யம் போன்ற ஆபிசாரங்களை போக்கும் வல்லமை படைத்தது. மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

பகளாமுகி பிரம்மாஸ்திர ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஏன் இந்த ஹோமத்தில் கலந்துகொள்ள வேண்டும்!

எல்லாவித துன்பங்களையும் நீக்கி, பக்தர்களின் இதயங்களில் நம்பிக்கை, துணிச்சல், உறுதியை அளித்து மேம்பட இந்த பிரம்மாஸ்திர ஹோமம் உதவும்.

தீராக் கடன்களை தீர்த்து வணங்குபவர்களின் உள்நாட்டு வளர்ச்சி மேம்படுத்தும்.

எதிரிகள் பற்றிய அச்சமின்றி, அவர்களை அடக்கி மகிழ்ச்சி கொள்ள செய்யும்.

உங்களுக்கு எதிரான எல்லா தீய திட்டங்களும் தோல்வியடையும்.

அச்சமும் கவலையும் நீங்க உங்கள் எல்லா காரியமும் வெற்றியாக மாறும். படிப்பில் கவனம் செல்லும். தீய பழக்கங்கள் விலகும். தீய சேர்க்கை விலகும்.

வம்பு, வழக்குகள், பழி, பாவம் இருந்தால் இந்த ஹோமம் தீர்த்து வைத்து வாழ்வில் நலமும் வளமும் அருளும்.
 
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

பகளாமுகி பிரம்மாஸ்திர ஹோமம்

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த சங்கல்ப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக மஞ்சள், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

பகளாமுகி பிரம்மாஸ்திர ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

brammaasthira homam qr code

வடலூர்: தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு சொந்த வாகனத்தில் செல்கிறீர்களா? – இதைப் படிங்க முதல்ல!

ஜோதி தரிசன நேரங்கள் என்னென்ன ?கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் நாளை 154-வது தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர... மேலும் பார்க்க

சிதானந்தஜி: விரும்பியவாறே உங்கள் வாழ்க்கை அமைய எளிய ரகசியம்; கலந்து கொள்ளுங்கள் அனுமதி இலவசம்

9-ம் தேதி (9-2-2025) அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் (திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறம்) எப்படி வாழ்வது? என்ற தலைப்பில் ஆன்மிக சிறப்புரை ஆற்றவுள்ளார் சி... மேலும் பார்க்க

மண்ணச்சநல்லூர்: ரூ.50 கோடி மதிப்பிலான 1000 ஆண்டு பழைமையான ஐம்பொன் சாமி சிலைகள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் உள்ளவர்கள் தங்களது வீட்டிற்கு அ... மேலும் பார்க்க

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா!

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா! மத் பாகவதம், சாதுர்மாஸ்ய விரத மகிமையைப் பற்றி விவரிக்கிறது. ஒரு முறை சந்நியாசிகள் கூடி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் பணிவிடை ... மேலும் பார்க்க