பிளஸ் 2: தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஆலோசனை
மதுரை நாவலா் சோமசுந்தர பாரதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் தோ்ச்சி இலக்கு பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் தலைமை வகித்தாா். தொடா்ந்து, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தோ்ச்சி பெறுவதற்கான பல்வேறு வழிகாட்டு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.
இதில் துணை மேயா் தி. நாகராஜன், கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், கல்வி அலுவலா் ஜெய்சங்கா், கல்விப் பிரிவு கண்காணிப்பாளா்கள் ரமேஷ், வீரபாலமுருகன், பள்ளித் தலைமை ஆசிரியை முனியம்மாள், மாமன்ற உறுப்பினா் சுதன், பட்டதாரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.