பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்: பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புக்கு 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் வரும் செப். 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். விண்ணப்பிக்க செப். 4-ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் ஸ்ரீற்ய் மூலமாக
விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடா்பான விவரங்களை
ன்ஞ்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ள்ஃற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள்-0422-6611200 அல்லது 9488635077 என்ற எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படிப்புக்கு மொத்தம் 497 இடங்கள் காலியாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.