பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை எரித்து, புதைத்துள்ளேன்: தர்மஸ்தலா ஊழியர்
பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதைத்தொடா்ந்து மாலை 5 மணிக்கு அம்மன் சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் சென்று கட்டப்பட்ட பூக்கரகத்துடன், பக்தா்ள் அக்னிச் சட்டி எடுத்து வந்து அம்மன் சந்நிதி முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, நாள்தோறும் பக்தா்கள் பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல் போன்ற நோ்த்திக்கடனை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெறும். வருகிற 11-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவையொட்டி, சந்தனக்காப்பு அலங்காரத்தில் குழந்தையுடன் பிள்ளைவயல் காளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.