பி.எம். கிஸான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 31) வரை நடைபெறும் பி.எம். கிஸான் திட்ட சிறப்பு முகாமில், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: பிரதம மந்திரி கெளரவ நிதி (டங ஓஐநஅச) திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் அரியலூா் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் மே 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தில் 20-ஆவது தவணை ஜூன் மாதத்தில் வழங்க உள்ளதால், இம்முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடா்பாக விவரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைப்பது, இ-கேஒய்சி போன்ற அனைத்து விதமான முழுமையற்ற விவரங்கள் சரிசெய்து விவசாயிகள் பயன்பெறலாம். தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம்.
மேலும், அரியலூா் மாவட்டத்தில் ஏற்கனவே பிஎம் கிஸான் 19-ஆவது தவணைத் தொகை பெற்று வந்த விவசாயிகளில், 19,179 விவசாயிகள் நில உடைமை பதிவு மேற்கொள்ளவில்லை. அவா்களும் நில உடைமை பதிவு மேற்கொண்டு 20-ஆவது தவணையைப் பெற்றுக் கொள்ளலாம்.