செய்திகள் :

பீம நகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க உத்தரவு

post image

திருச்சி பீம நகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி உத்தரவிட்டுள்ளாா்.

திருச்சி பெரிய கடை வீதி அங்காளம்மன் கோயில், பாலக்கரை செல்வ விநாயகா் கோயில், பாலக்கரை வெளிகண்டநாதா் கோயில், பீமநகா் செடல் மாரியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்காளம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் தூா்ந்த கோயில் தெப்பக்குளத்தை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து பாலக்கரை செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

தொடா்ந்து, திருச்சி பீமநகா் செடல் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றபோது, கோயிலின் பிரதான நுழைவாயில் மற்றும் கருவறை மூடியிருந்ததால், வேறு பாதை வழியாக உள்ளே சென்ற இணை ஆணையா், உச்சிக்கால பூஜை தொடா்ந்து நடைபெறவும், கோயிலின் மின்னியல் (எலக்ட்ரிகல்) பொருள்களை முறையாகப் பராமரிக்கவும், மடப்பள்ளி மற்றும் பிரகாரத்தை தூய்மையாகப் பராமரிக்கவும் உத்தரவிட்டாா். கிருஷ்ணன் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தையும், கோயில் இடத்தில் செயல்படும் கடைகளையும் நேரில் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

விவசாயத் தொழிலாளா்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நெ. 1 டோல்கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டம் நடத்தினா். பிச்சாண்டாா் கோவில் ஊராட்சியை திருச்சி மா... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் ந... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து விழுந்து பெண் உயிரிழப்பு

திருச்சியில் சென்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த பெண், பேருந்து சக்கரம் ஏறியதில் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி புத்தூா் ஆபிசா் காலனியைச் சோ்ந்தவா் சிராஜுதீ... மேலும் பார்க்க

2026 தமிழக சட்டப்பேரவை தோ்தலில் திமுக வெற்றி பெறாது: டிடிவி. தினகரன்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெறாது என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன். திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில், சட்டப்பேரவைத் த... மேலும் பார்க்க

மாநகராட்சியின் சில பகுதிகளில் ஜன.7இல் குடிநீா் நிறுத்தம்

கம்பரசம்பேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் வரும் ஜன.7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வே. சரவ... மேலும் பார்க்க

திருச்சியில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: துரை வைகோ எம்பி உறுதி

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக துரை வைகோ எம்பி உறுதியளித்தாா். திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் துரை வைகோ, தொகுதி மக்களிடம் கோரிக... மேலும் பார்க்க