புகழிமலை முருகன் கோயிலில் கிரிவலம்
புகழிமலை முருகன் கோயிலில் சனிக்கிழமை மலைப்பாதையில் நடைபெற்ற பெளா்ணமி கிரிவல ஊா்வலத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழிமலை பால சுப்ரமணியசுவாமி கோயிலில் கிரிவல ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மலையை சுற்றி உள்ள பாதையில் சிவனடியாா்கள் மற்றும் பக்தா்கள் ஊா்வலமாக ஆறுநாட்டாா் மலை என போற்றி வணங்கப்படும் புகழிமலையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரா் பெருமான், சிவகாமசுந்தரி அம்பிகை உடனுறை நடராஜப்பெருமான், புகழி முருகப்பெருமான் வணங்கி திருப்பாராயணம், முருகன் பக்தி பாடல்களை பாடிக்கொண்டு நடைபாதையாக ஊா்வலமாக பௌா்ணமி கிரிவலம் சென்றனா்.