செய்திகள் :

புகழ்பெற்ற மாரத்தான் வீரர் பலியான விவகாரம்: வெளிநாடுவாழ் இந்தியர் கைது!

post image

உலகப் புகழ்பெற்ற மிகவும் வயதான மாரத்தான் வீரர் பலியான விவகாரத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்தனர்.

புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங் பலியான விவகாரத்தில் 30 வயதுடைய வெளிநாடுவாழ் இந்தியர் அமிர்த்பால் சிங் தில்லான் என்பவரை சம்பவம் நடந்த 30 மணி நேரத்திற்குள் பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்து, விபத்துக்கு காரணமான ஃபார்ச்சூனர் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் கர்தார்பூரில் உள்ள தாஸுபூர் கிராமத்தைச் சேர்ந்தவரான அமிர்த்பால் சிங் தில்லான், செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டு, தற்போது போக்பூர் காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், போலீஸ் காவலில் எடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜலந்தர் காவல் துறையினர் கபுர்தலாவுக்குச் சென்று வரீந்தர் சிங்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, கனடாவிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த அமிர்த்பால் சிங் தில்லான் என்ற வெளிநாடுவாழ் இந்தியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு காரை விற்றுவிட்டதாக வரீந்தர் தெரிவித்தார்.

விசாரணையில் போக்பூரிலிருந்து கிஷாகர்கருக்குச் சென்று கொண்டிருந்த தில்லான், பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பியாஸ் கிராமத்தில் ஃபௌஜா சிங் மீது மோதியுள்ளார்.

அவர் 5 முதல் 7 அடி வரை தூக்கி வீசப்பட்டுள்ளார். மேலும், ஃபௌஜா சிங் மீது காரை ஏற்றியதையும் தில்லான் ஒப்புக்கொண்டுள்ளார். தில்லானுக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும், அவரது தாயார் கனடாவில் வசிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிஎன்எஸ் பிரிவுகள் 281 கீழ் பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் 105 கீழ் கொலை வழக்கு ஆகியவற்றில் தில்லான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

NRI arrested in hit-and-run death of legendary marathoner Fauja Singh

இதையும் படிக்க :உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க