எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்
புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது
பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வடகரை கல்லாா் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியில் உள்ள மாணிக்கம் (45) என்பவரின் கடையில் சோதனை செய்தபோது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.