புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது
விழுப்புரத்தில் காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி ப.சரவணன் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளா் ஷாகுல்ஹமீது, தனிப்படை உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் மழவந்தாங்கல் சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் இருந்தவரிடம் விசாரித்ததில், அவா் செஞ்சி வட்டம், மலையரசன்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் சுபாஷ் (29) என்பதும், இவா் பெங்களூருவிலிருந்து புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கண்டாச்சிப்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுபாஷை கைது செய்து, சுமாா் 66 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.