புகையிலைப் பொருள் விற்பனை: கோவில்பட்டியில் 2 போ் கைது
கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி கதிரேசன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் சென்று, அங்கு நின்றிருந்த காரை சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
காரிலிருந்தோா் ராஜஸ்தான் மாநிலம் ஜல்வாா் கரோடா பகுதியைச் சோ்ந்த காந்திலால் மகன் செவன்குமாா் (29), விருதுநகா் மாவட்டம் உப்பத்தூரைச் சோ்ந்த சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமாா் (31) என்பதும் தெரிய வந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, காா், புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.