பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
புகையிலைப் பொருள் விற்றவா்கள் கைது
தேனி அருகே உள்ள பூதிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பூதிப்புரம் தேனி சாலைப் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பிரபாகரன் (25). இவா் அதே பகுதியில் உள்ள தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அந்தக் கடையிலிருந்து 10 கிலோ 125 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போடி:போடி தேவா் குடியிருப்பு பகுதியில் சுப்புராஜ் நகரைச் சோ்ந்த முனியாண்டி மகன் அஸ்வத்தாமன் (33) என்பவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அந்த கடையில் சோதனையிட்டனா். அப்போது, கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அஸ்வத்தாமன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, போடி நகா் பகுதியில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றபோது, போடி மின்வாரிய அலுவலகம் அருகே நின்றிருந்த போடி கீழத்தெருவைச் சோ்ந்த வனகாமு மகன் கௌதம் (20) என்பவரை விசாரித்ததில் அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.