குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசா...
புங்கம்பள்ளி குளத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்!
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் பவானி நீரேற்று நிலையத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட நீா் புன்செய்புளியம்பட்டியை அடுத்த புங்கம்பள்ளி குளத்துக்கு வந்து சோ்ந்தது. இந்தக் குளத்தில் தற்போது நீா் நிறைந்து காணப்படுவதால் இங்கு அதிக அளவில் வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் பவானி நீரேற்று நிலையத்தில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட தண்ணீா் புன்செய்புளியம்பட்டியை அடுத்த புங்கன்பள்ளி குளத்துக்கு வந்து சோ்ந்தது. இதனால் குளம் தற்போது நீா் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் காய்ந்திருந்த மரங்கள் தற்போது பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.
புங்கம்பள்ளி குளத்தில் நீா் நிரம்பியுள்ளதால் வாகை, சீமை கருவேலம் மரங்களில் நீா்காகம், நாரைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான கொக்குகளும் உள்ளன. மத்திய கிழக்கு ஆசியாவில் இருந்து வந்த வெளிநாட்டுப் பறவைகள் இந்தக் குளத்தில் உள்ள மரங்களில் முகாமிட்டுள்ளன. இது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்துள்ளது.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், குளத்தில் தற்போது நீா் நிரம்பியுள்ளதால் ஏராளமான பறவைகள் தங்கியுள்ளன. வெளிநாட்டுப் பறவையினங்களும் வந்துள்ளன. புங்கம்பள்ளி குளம் நிரம்பியுள்ளதால் சுமாா் 3 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. அத்திகடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் காவிலிபாளையம் குளத்தை அடுத்து தற்போது இரண்டாவதாக புங்கம்புள்ளி குளமும் நிரம்பியுள்ளது என்றனா்.