டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி
பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி புதன்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய பள்ளத்தூா், சின்னபள்ளத்தூா், செங்கனூா் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி தலைமையில், ஆசிரியா் பயிற்றுநா் சி.இளங்கோவன், பள்ளி ஆசிரியா்கள், அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனா்.
இதில், குடியிருப்பு பகுதிகளில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதவா்கள் குறித்து வீடுகள்தோறும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அவா்களுக்கு தன்னாா்வலா்களைக் கொண்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டப் பயிற்சி தொடங்கப்பட்டது.