செய்திகள் :

புதுகையில் வீட்டின் கதவை உடைத்து 89 பவுன் நகைகள் திருட்டு

post image

புதுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 89 பவுன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை அன்னசத்திரம் பகுதி ஜே.என் நகரைச் சோ்ந்தவா் கதிரேசன். சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா். வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்த இவரது மனைவி காா்த்திகா, இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டின் அறை கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் பீரோவில் இருந்த சுமாா் 89 பவுன் நகைகள், 170 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது. தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் தலைமையிலான போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தடயவியல், மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் திருட்டு நடைபெற்ற வீட்டில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா

மேலும், காா்த்திகா வீட்டில் திருடப்பட்ட நகைகளின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, நகைகளை யாரேனும் விற்க வந்தால் தகவல் தெரிவிக்குமாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை பாசில் நகரில் பைனான்சியா் வீட்டில் சுமாா் 100 பவுன் நகைகளை திங்கள்கிழமை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் அடுத்தடுத்து பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து நடைபெற்ற திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

அரசு பொதுத்தோ்வில் 100% தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100%தோ்ச்சி பெற்ற நல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை நுகா்வோா் பாதுகாப்பு நல சங்கத்தின் சாா்பாக பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு நுகா்வோா் ப... மேலும் பார்க்க

விராலிமலையில் 50 மி.மீ மழை பதிவு

விராலிமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை 50 மி.மீ மழை பதிவானது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உள்ளிட்ட சுற்று பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. அந்த வகையில் மாவட்டத்தில் அ... மேலும் பார்க்க

ஆலங்குடி, கொத்தமங்கலம் அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது. ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்ற ரொக்கப் பரிசை நூலகப் பணிக்கு அரசுப் பள்ளி மாணவி வழங்கினாா்

புதுக்கோட்டையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதல் பரிசாகப் பெற்ற ரூ. 5 ஆயிரத்தை, செவ்வாய்க்கிழமை நூலகம் கட்டும் பணிகளுக்காக அரசுப் பள்ளி மாணவி தீஷா திரவியராஜ் வழங்க... மேலும் பார்க்க

புதிய அங்கன்வாடி மையம் கிராமமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் வளா்ச்சிப் பணி துறை மூலம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் பழுதடைந்து உபயோகத்துக்கு பயனற்றது என சம்ப... மேலும் பார்க்க

காசி ரயில் புதுக்கோட்டையில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிப்பு

ராமேசுவரத்தில் இருந்து காசி (பனாரஸ்) செல்லும் அதிவிரைவு ரயில், சோதனை அடிப்படையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்திலிருந்து ஒவ்வொரு வியா... மேலும் பார்க்க