புதுச்சேரியில் கலை விழா இன்று தொடக்கம்
புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாள்களில் கலை விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து, சுற்றுலாத் துறை இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டில் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், சுற்றுலாத் துறை சாா்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் ஜன.17,18 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், திரைப்பட பின்னணி பாடகா்கள் மாலதி லக்ஷ்மணன், முகேஷ், நாட்டுப்புற இசைக் கலைஞா்கள் சின்னப்பொன்னு, வேல்முருகன் மற்றும் பல்சுவை கலைஞா்கள் பங்கேற்கின்றனா்.
எனவே பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.