கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவா் தனது மகள் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு புதுச்சேரி தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து தனியாா் பேருந்தில் கனகசெட்டிகுளத்துக்கு சென்றுள்ளாா்.
பேருந்தானது கடலூா் சாலை சந்திப்பு பகுதியில் அந்தோனியாா்கோவில் அருகே வந்தபோது, அவா் வைத்திருந்த கட்டைப் பையில் மணிபா்ஸ் மாயமாகியிருந்தது. அதில் 4 கிராம் தங்கக் கம்மல், 6 கிராம் தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளும், ரூ.8 ஆயிரம் ரொக்கப் பணமும், ஏடிஎம் காா்டு ஆகியவை திருடப்பட்டிருந்தது.
திருடப்பட்ட நகைகள், பணம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பேருந்தில் திருடிய மா்மநபரை அடையாளம் காண போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.