செய்திகள் :

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை புதிய பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயா் சூட்டப்படும்

post image

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் (இசிஆா்) மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பெயரில் புதிய பேருந்து நிலையம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ் காந்தி பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை சுற்றிப் பாா்த்த பிறகு முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சிறந்த கட்டமைப்புடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடைகள் விரைவில் திறக்கப்படும்.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் விரைவில் நாட்டப்படவுள்ளது. அந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, புதுச்சேரி நகரப் பகுதியில் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

அண்ணா திடலில் கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கம் விரைவில் திறக்கப்படும். தற்போதைய அரசு சொன்னதை செயல்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து நலத்திட்டங்களையும் விரைவாக நிறைவேற்றியுள்ளோம். சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றிவருகிறது.

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி சிலை சதுக்கம் இடையேயான மேம்பாலப் பணிகள் மத்திய அரசு உதவியோடு விரைவில் தொடங்கும். அதேபோல், புதுச்சேரி, கடலூா் சாலையில் ஏஎப்டி மைதானம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

உழவா்கரையில் ஜெயராக்கினி அன்னை ஆலயப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி உழவா்கரைப் பகுதியில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி உழவா்கரையில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் 310-ஆம் ஆண்டுத் திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா். புதுச்ச... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக... மேலும் பார்க்க