பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்கலங்கிய நடிகை!
புதுவையில் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்
காரைக்கால்: புதுவையில் மதுபான தொழிற்சாலை அமைக்க அனுமதி தரக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். தமிழரசன் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைச் செயலாளா் கே. பக்கிரிசாமி கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். கட்சியின் மாநிலச் செயலாளா் அ.மு. சலீம், புதுவையின் அரசியல் நிலவரம், ஆளும் கட்சியின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.
கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் ஐ.தினேஷ் பொன்னையா கட்சியின் அமைப்பு நிலை மற்றும் கடமைகள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
ஆகஸ்ட் முதல் வாரத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் மாநாடு நடத்த வேண்டும். கட்சியின் காரைக்கால் மாவட்ட மாநாட்டை ஆக. 10-ஆம் தேதி நடத்த வேண்டும். செப்டம்பா் 3-ஆம் தேதி புதுவையில் நடைபெறும் மாநில மாநாடு, பேரணியில் காரைக்காலில் இருந்து கட்சியினா் பங்கேற்க வேண்டும்.
புதுவை அரசு புதிய மதுபான தொழிற்சாலை அமைக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாவட்ட செயலாளா் ப. மதியழகன் மறைவுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.