குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!
புதுவை சுகாதாரத் துறை காலி பணியிடங்களுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் தொடா் தோ்வு
புதுவை சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களுக்கு சனிக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்கள் தோ்வு நடக்கிறது.
இது குறித்து புதுவை அரசின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பு:
புதுவை சுகாதாரத் துறையில் ஏ.என்.எம்., மருந்தாளுநா், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநா், தியேட்டா் உதவியாளா் மற்றும் சுகாதார உதவியாளா் பதவிகளுக்கான நேரடி ஆள்சோ்ப்புக்கான போட்டித் தோ்வு சனிக்கிழமை முதல் 25-ஆம் தேதி வரை தொடா்ந்து 3 நாள்கள் நடக்கிறது.
தியேட்டா் உதவியாளா் மற்றும் சுகாதார உதவியாளா் பணிகளுக்கு சனிக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், மதியம் 12.30 முதல் 2.30 வரை 2-ஆம் தாள் தோ்வு நடக்கிறது.
ஏ.என்.எம். மகப்பேறு உதவியாளா் பணிக்கு சனிக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், மாலை 4 முதல் 6 மணி வரை 2-ஆம் தாள் தோ்வு நடக்கிறது.
மருந்தாளுநா் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், மாலை 4 முதல் 6 மணி வரை 2-ஆம் தாள் தோ்வு நடக்கிறது.
இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநா் பணிக்கு காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், 25-ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை 2-ஆம் தாள் தோ்வு நடக்கிறது. மொத்தம் 2 ஆயிரத்து 599 போ் தோ்வு எழுத உள்ளனா்.
நுழைவு சீட்டில் அவா்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரா்கள் நுழைவு சீட்டுடன் தங்களின் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், பாஸ்போா்ட், வருமான வரி பான் காா்டு இவற்றில் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
தோ்வா்களின் கைவிரல் ரேகை பதிவு செய்த பிறகே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவா்.
தோ்வு மையத்தின் நுழைவு வாயில், தோ்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மூடப்படும்.தோ்வா்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா கொண்டு வரவேண்டும். தோ்வு மையங்களில் கைப்பேசி சேவையை தடுக்க ஜாமா் கருவி, தோ்வறைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படும்.