புனித சந்தியாகப்பா் தேவாலய திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கண்கொள்ளான்பட்டினம் புனித சந்தியாகப்பா் தேவாலய திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடைபெறும். அதேபோல, இந்த ஆண்டு புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ராஜசிங்கமங்கலம் வட்டார அதிபா் அருள்தந்தை தேவசகாயம் கொடியேற்றி வைத்து சிறப்பு திருப்பலியை தலைமை வகித்து நிறைவேற்றினாா். சம்பை பங்குத்தந்தை செல்வகுமாா், உதவிப் பங்குத்தந்தை பாக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு திருப்பலியில் திருஇருதய அருள்சகோதரா்கள் ஜான், தாமஸ் அருள்சகோதரிகள் கிரேஸி, மரிய கொரட்டி, அல்போன்சா, சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான இறைமக்கள் பங்கேற்றனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ்ப் பவனி வருகிற 24-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம நிா்வாகிகள், இறைமக்கள் செய்திருந்தனா்.