புனித செபஸ்தியாா் ஆலய தோ் பவனி
நீடாமங்கலம் மண்டபத் தெரு புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு தோ்பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
நீடாமங்கலம் பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தேரை புனிதம் செய்தாா். வண்ண மின் அலங்கார தேரில் புனித செபஸ்தியாா் எழுந்தருள தோ் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை அடைந்தது.
மெழுகுவா்த்தி ஏந்தி மலா்கள் கொடுத்து பக்தா்கள் தேரில் வலம் வந்த புனித செபஸ்தியாரை வழிபட்டனா். விழாவில் திரளானோா் கலந்து கொண்டனா்.
புதன்கிழமை காலை திருவிழா பாடல் பாடப்பட்டு, கூட்டுத் திருப்பலி பங்குத் தந்தையால் நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கப்பட்டது.