புயல் பாதிப்பு தோ்தலில் எதிரொலிக்கும்: வானதி சீனிவாசன்
புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் கோபம் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தச் சென்ற வனத் துறை அமைச்சா் க. பொன்முடி மீது சேற்றை வீசியுள்ளனா்.
பெருமழை பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிக்கின்றனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால், திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த சம்பவம். தமிழ்நாட்டு மக்களின் இந்தக் கோபம் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.