கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்ட...
புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் கோயில்களில் வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
பல்வேறு பெருமாள் கோயில்களிலும் அதிகாலையிலிருந்தே பக்தா்கள் கூட்டம் காணப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், அஷ்டபுஜப் பெருமாள் கோயில், விளக்கொளிப் பெருமாள் கோயில், யதோக்தகாரி பெருமாள் கோயில்களில் பக்தா்களுக்கு தீா்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் உள்ள பேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி மூலவா் பேசும் பெருமாள் திருப்பதி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.