செய்திகள் :

புரோட்டா கடை, இட்லி கடை... தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் நித்யா மெனன்!

post image

நடிகை நித்யா மெனனின் தமிழ்ப் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

நடிகை நித்யா மெனன் தமிழில் 180 படம் மூலம் அறிமுகமானவர். சில படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கடந்த 10 ஆண்டுகளில் இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா - 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை படங்கள் வெற்றியை அடைகின்றனவோ இல்லையோ தன் கதாபாத்திரம் பேசப்படும் என்கிற அளவுக்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திவிடுவார்.

இந்தாண்டு பொங்கல் வெளியீடாக காதலிக்க நேரமில்லை, கடந்த வெள்ளிக்கிழமை தலைவன் தலைவி, வருகிற அக். 2 ஆம் தேதி இட்லி கடை என 2025-ல் மூன்று தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, இரண்டு படங்களில் பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன. இட்லி கடையில் எப்படியும் பேசப்படுவார் என்றே கணிகப்பட்டுள்ளது.

நித்யா மெனன்

இதில், தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதியின் புரோட்டா கடையில் நித்யா மெனன் வேலை செய்யும் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அடுத்ததாக, தனுஷுடன் இட்லி கடையில் வேலை செய்ய உள்ளார் என்பதால் இந்தக் கூட்டணி குறித்தும் ஆவல் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: நடிப்பிற்காக உடல் எடையைக் குறைக்கும் லோகேஷ் கனகராஜ்!

நித்யா மெனனின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கதைகளுக்குக் கூடுதல் பலமாக இருப்பதால், நீண்ட காலமாக தமிழ் ரசிகர்களின் விருப்பமான நாயகிகளின் பட்டியலில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார்.

actor nithya menen tamil movies getting good response from fans

உலகக் கோப்பை செஸ்: திவ்யா, ஹம்பிக்கு மோடி வாழ்த்து!

மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் சாம்பியன் திவ்யா தேஷ்முக் மற்றும் இரண்டாமிடம் பிடித்த கோனெரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ... மேலும் பார்க்க

தலைவன் தலைவி அதிகாரப்பூர்வ வசூல்!

தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில்... மேலும் பார்க்க

இனி, சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் மற்றும் அயலி தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் ஒளிபரப்பாகாது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒ... மேலும் பார்க்க

சுபம் என்ற சொல்லைக் காண ஆர்வம்: எந்தத் தொடருக்குத் தெரியுமா?

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள், இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜீ தமிழ், விஜய் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க