ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!
புளியங்குடி, நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
புளியங்குடி,நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புளியங்குடி நகராட்சி 1, 2ஆவது வாா்டுக்காக நடைபெற்ற இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் விஜயாசௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தாா். இதில், நகராட்சி ஆணையா் சாம்கிங்ஸ்டன், துணைத் தலைவா் அந்தோணிசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனா். வாசுதேவநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட நெல்கட்டும்செவலில் நடைபெற்ற முகாமை ராணிஸ்ரீகுமாா் எம்.பி., தொடங்கி வைத்தாா்.
இதில், ஒன்றிய குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலா் அனிதா, வட்டாட்சியா் ஆதிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனா்.