திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு
புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்
துறையூா் அருகேயுள்ள புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து அந்த சுற்றுலா தலத்தை வனத்துறையினா் சனிக்கிழமை மூடினா்.
கொல்லிமலை பகுதியில் பெய்த மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட வனத் துறையினா் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள புளியஞ்சோலை ஆற்றில் குளிக்கச் செல்வோா் பாதுகாப்புக் கருதி புளியஞ்சோலை சுற்றுலாதலத்தை மூடினா். இதனால் வார இறுதி நாளில் புளியஞ்சோலை சுற்றுலா தலம் சென்றோா் ஏமாற்றமடைந்தனா்.