செய்திகள் :

`பூட்டிய வீட்டுக்குள் எலும்புக்கூடு' - கிரிக்கெட் பந்து எடுக்கப்போனபோது அதிர்ச்சி - தீவிர விசாரணை

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நம்பள்ளி எனும் பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் அருகில் அந்தப் பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட் பந்து கைவிடப்பட்ட வீட்டின் சுற்றுச்சுவருக்குள் விழுந்திருக்கிறது. அந்தப் பந்தை எடுப்பதற்காக அந்தச் சுவற்றில் ஏறி வீட்டுக்குள் சென்றபோது அதிர்ச்சித் தரும் வகையில், மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், வீட்டின் சமையலறை போல் தோன்றும் தரையில் ஒரு எலும்புக்கூடு முகம் குப்புறக் கிடப்பது பதிவாகியிருந்தது. அந்த எழும்புக்கூட்டைச் சுற்றி பல பாத்திரங்கள் கிடப்பதைக் காணலாம்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறப்பு துப்பறியும் குழு வீட்டிற்குச் சென்று பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்தது. அதே நேரத்தில் இறந்த நபரின் அடையாளத்தை அறிய எழும்புகளை பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது குறித்துப் பேசிய காவல்துறை துணை ஆணையர், ``காவல்துறை குழு வீட்டிற்குச் சென்று, கதவை உடைத்து மனித எழும்புக்கூடுகளைக் கைப்பற்றியிருக்கிறது. வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாகவும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீடு காலியாக இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடு முனீர் கான் என்பவருக்கு சொந்தமானது. அவருக்கு 10 குழந்தைகள் இருந்தனர். அவரது நான்காவது குழந்தை இங்கு வசித்து வந்ததாகவும், மீதமுள்ளவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. கிடைத்திருக்கும் எழும்புக்கூட்டின் அடிப்படையில், இறந்த நபர் சுமார் 50 வயதுடையவராக இருக்கலாம்.

திருமணமாகாதவராகவும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இருக்கலாம். அவர் இறந்து சில வருடங்களாகிவிட்டதாக தெரிகிறது. எலும்புகள் கூட நொறுங்கிப் போயிருந்தன. இது இயற்கையான மரணமாக இருக்கலாம். மேலும் அறிய உறவினர்களிடம் பேச முயற்சிக்கிறோம்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`நாங்கள் சாக வரவில்லை, இயற்கையோடு வாழ்ந்தோம்' - குழந்தைகளுடன் கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்

கர்நாடகா மாநிலம், உத்தர கர்நாடகா பகுதியில் உள்ள கொகர்னா வனப்பகுதியில் இருந்த மலைக்குகையில் ரஷ்ய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அப்பகுதிய... மேலும் பார்க்க

``பாம்புகள் தீண்டவில்லை, விலங்குகள் தாக்கவில்லை ஏனென்றால்.." - இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண்!

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னட பகுதியில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தன் இரு மகள்களுடன் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர்... மேலும் பார்க்க

திருமணம், குழந்தை பெறுதல் சிக்கலாகுமா? தம்பதியை அதிர்ச்சியடைய செய்த மருத்துவர்!

பெங்களூரைச் சேர்ந்த தம்பதி கண் பிரச்சனை காரணமாக உள்ளூர் கண் மருத்துவரை அணுகியுள்ளனர். அங்கு அந்த மருத்துவர் அவர்களை பரிசோதித்த பின்னர் கண் பிரச்சனைக்கும் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலுக்கும் தொடர்பு... மேலும் பார்க்க

காதலியை மறக்க மலையேறிய இளைஞன்; 6 நாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

முன்னாள் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் மலைப் பகுதிக்குச் சென்ற, இளைஞரை மீட்ட சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.28 வயதான லியூ என்ற இளைஞர் தன்... மேலும் பார்க்க

`89 வயதில் உலக சாதனை' - பிரிட்டிஷ் முதல் பாகிஸ்தான் வரை பாராட்டிய `ஃபௌஜா சிங்' சாலை விபத்தில் மரணம்

‘டர்பனட் டொர்னாடோ’ என்று அன்பாக அழைக்கப்படுபவர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி 114 -வது பிறந்த நாளைக் கொண்டாடிய இவர், 2000 முதல் 2013 வரை மொத்தம் 14 ஒன்பது முழு மர... மேலும் பார்க்க